28 பெப்ரவரி 2012

இந்த மூவகை இலக்கியங்கள் கொண்ட மற்ற வேறுபாடுகள் இலக்கிய வகைப்பட்டவை; இவை இந்த இலக்கியங்களின் இயல்பு குறித்தவையல்ல, குறிப்பிட்ட ஆக்கங்கள் பற்றியவை....

26 பெப்ரவரி 2012

கடற்கரையில் நடக்கின்றார் சிறார் மூவர். அருகருகில் கைகோர்த்துச் செல்கின்றார், முன்னே. ஏறத்தாழ சம உயரமும் வயதும் கொண்ட மூவரில் இடையிலிருப்பவன் சற்றே...

20 பெப்ரவரி 2012

ரோலான் பார்த் எழுதிய பெயர்பெற்ற இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடையும். விழியின் கதை நாவலின் அடுத்து வைத்து இதை வாசிக்க வேண்டுகிறேன் - நாகார்ஜுனன்....

17 பெப்ரவரி 2012

ரோலான் பார்த்தின் இந்தக்கட்டுரையைத் தமிழாக்கி வருகிறேன். விழியின் கதை நாவலை யுரேக்கா தமிழாக்கி வருகிறார். அது முடிவதற்குள் இந்தக் கட்டுரை...

பழைய பதிவுகளிலிருந்து சில

என் பத்தாண்டுக்காலத் தனிமைவாசத்துக்குப் பிறகு சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலை நேற்றிரவு நெடுகிலும் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். உறக்கமற்ற வாசிப்பு என்பதன் ஊடேயும் கண்ட கனவு கலையாமல் எஞ்சிய கிறுகிறுப்பு இன்னமும் போகவில்லை. சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலை இவ்வளவு காலம் தீண்டவில்லையே என்கிற தாபம் ஒருவழியாகத் தணியும் என்று பார்த்தால் தணியவுமில்லை! இந்தக் கரட்டு-எழுத்தின் வெப்பமும் காமமும், சீற்றமும் மென்மையும், இசைவும் மாறும், நட்பும் பகையும் என்னை ஒராயிரம் முறை...
30 செப்டம்பர் 2008
"சொல்லப்போனால் பிரதி ஒவ்வொன்றும் சோம்பலான ஓர் எந்திரம்தான். தன் வேலையில் கொஞ்சத்தை வாசகனைச் செய்யச்சொல்லும். பெறுநர் புரிந்துகொள்ள வேண்டிய அத்தனையும் பிரதியே சொல்லும் என்றிருக்க முடியுமா என்ன? அப்போது பிரதி ஒருபோதும் முடிவுறாமல் போய்விடும்!" --- உம்பர்த்தோ ஈக்கோ (1) கதை, தொடக்கமும் முடிவும் கொண்டதல்ல. கடித வடிவம் மாத்திரமே தொடக்கமும் முடிவும் கொண்டதாக இருக்கும் என்கிறார் லூயி கரோல். கதைசொல்லும் மொழி இருப்பதோ அதன் உத்தியான சொல்லுதலில். ஆக, சொல்லுதல் என்ற மொழிமூலம் தீட்டுகிற வரைபடம்...
14 ஜூலை 2009
மன்னார்குடாப் பகுதியில் குதிரைலாடமாய் வளையும் கரைமணலை அகற்றி இருபாறைப்படிவங்களை வெட்டிக்கொண்டு போர்க்கப்பல்களில் கும்பினிக்கொடி நீரில்பட்டு அசைந்தது. இடைப்பட்ட வெளியில் பலவகைப்பாறைகளில் கடல் உடலிகளில் அசைவு. கீழே கப்பலும் மேலே ரயிலும் போக தீவுகளை இணைக்கும் ரயில்பாதை கடலை ஊடுருவிச்செல்லும். தூக்குப்பாலத்துடன் கூடிய பாம்பன் வாராவதியில் ரயில் செல்லும்போது இரும்புக்கால அதிர்ச்சிகளில் கடல்நீர் ஏறிய உச்சரிப்புகள். வாராவதி நடுவில் இரு கதவுகளைத் திறந்தால் கீழே சுழலும் பெண்கடல். இங்கிலாந்திலிருந்து...
6 பெப்ரவரி 2009
இலங்கை வாழ் தமிழ்மக்கள் தற்போது போரில் அனுபவித்துவரும் வேதனைகள் நிற்க வேண்டும், போர் ஓய்ந்து தமிழ்மக்கள் எல்லாவித உரிமைகளையும் பெற்று வாழ் வேண்டும் என்ற உயரிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்க்கவிஞர்கள் நடத்தும் ஒப்பாரி மற்றும் கண்டன அரங்கத்துக்கு என் உணர்வுபூர்வமான முழு ஆதரவும் வரவேற்பும் உண்டு. இதை ஒருங்கிணைத்துவரும் நண்பர்களில் ஒருவரான லீனா மணிமேகலையைத் தொடர்புகொண்டு பேசியபோது சுமார் இருநூறு கவிஞர்கள் இதில் எழுச்சியுடன் பங்கேற்கிறார்கள் என்ற...
7 டிசம்பர் 2008
பசியப் பிறந்தோம்குறைகொண்ட தோட்டமிதற்கு..ஆயின் புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல் மறு கொண்டமுட்செடி பலதில்பகையுடன் நழுவும் எம் காவலர்தம் கண்ணி வைக்கசிக்குமதில்மானும் சேவலும் மீனும் ஏன் எல்லாம் நன்றேகுருதி சிந்தும் தந்திரமாக யாவும் சீர்குலைந்து நிற்கும்அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்றுதேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதைவெட்டியழிப்பதேநம் கடனென்ப நேர்-விசாரணையேதும்திறக்காதுசாமர்த்தியமாய்ப் பிடித்துஒளிரும் எம் செயல் ஒவ்வொன்றாய் வண்டலாக்கிமீண்டும் உருவற்ற சேற்றுமண்ணாக்கிபுளிநொதித்த வானெனும் ஆடையாய் மூட இனிய...
18 பெப்ரவரி 2009
சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில் அரசியல்-சமுதாய-பொருளாதார நிலைமைகள் படுமோசமாகி வருகின்றன. இங்கெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் பயணம் செய்து எழதுவது அபூர்வம். சிறைக்கைதிகள் நிலைமை குறித்து அறியும் பொருட்டு ஜார்க்கண்ட மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்ட அ. மார்க்ஸின் கட்டுரை, ஆகஸ்ட் மாத தீராநதியில் வெளியாகியிருக்கிறது. அதிலிருந்து பகுதிகள் சில. - ---------------------------------------------------- "ஜார்க்கண்ட் மாநிலச்சிறைகளில் சுமார் ஆயிரம் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்...
15 ஆகஸ்ட் 2008
எரவாடா சிறை, பூனா நகரம், செப்டம்பர் 22, 1932 (காந்தியாரின் உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாவது நாள்) அம்பேத்கர்: இந்த நாட்டில் இரண்டு சித்தாந்தங்களைக் கொண்ட இரண்டு சமுதாயங்கள் உள்ளன என்பதை நாம் ஏற்று அதன்படி செயல்பட வேண்டும். எனவே எனக்கான இழப்பீட்டை நான் பெற்றாக வேண்டும். தவிர, வேறுவழிகளிள் எனக்கு வரவேண்டிய இழப்பீட்டை உறுதிசெய்யும் தெளிவான புரிதலும் எனக்கு வேண்டும். அரசாங்கத்தின் முடிவு எனக்கு 71 இடங்களைத் தருகிறது, அது நியாயமான, அறிவார்த்தமான, நிச்சயமான ஒதுக்கீடு என்று நான் உணர்கிறேன். காந்தியார்:...
2 அக்டோபர் 2008
தமிழில் நான் வாசிக்கும் வித்தியாசமான பதிவுகளை நீங்களும் உடனே வாசிக்க ஏதுவாக, இங்கே இடதுபுறம் நிற்க அதற்குத் தக பகுதியில் சுட்டிகள் தந்துவருகிறேன். கிட்டத்தட்ட தினமும் தர முடிகிறது, வித்தியாசமான பதிவுகள் வருகின்றன என்பதில் மகிழ்ச்சி. தற்போது காணப்பெறும் பதிவுகளில் 2007-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெஸ்ஸிங் பற்றி முரண்வெளியில் வந்தது. இந்தக் கட்டுரை, வாசிப்பின் இன்பம் என்பது முதலில் ஒரு சோதனைக்கட்டத்தைத் தாண்டும் என்பதை முன்வைக்கிறது. தமிழில் பல்வகைப் புதுஎழுத்தை வாசிக்க...
14 மே 2008
நீள்வேம்பலைக்காட்டின் தனிவசந்தம்பளிதச்சிகப்பில் பாறைகுருதிவாசம் தானே எழுதிய ஒரு மர்ம நாவல்வியன்னாவில் தொலைந்த இசைக்கட்டிடம்பகல்போல் இரவுபஞ்சகராதியின் உரைமரபுபார் நாற்காலியில் சுழன்றபடிபின்நிழல் முன்தொடர்வதான மூச்சு என எட்டு நாவல்களை எட்டே ஆண்டுகளில் எழுதிப் பெயர்பெற்றவர் எக்ஸ்-எக்ஸ்-எக்ஸ். தம்மைத் தொலைத்து மூதாதைகளின் வாதைகளை, தத்தளிப்புக்களை வெம்மை படர மீட்டுக்கொண்டு வந்து நம் கண்ணில் மட்டவர், சே, மண்ணில் நட்டவர். இவற்றில் சில இன்று வளர்ந்து ஆங்கிலம், பிற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்லாது...
10 ஆகஸ்ட் 2009
பல ஆண்டுகள் முன்பு ஒரு மார்ச் மாதம். வெள்ளை நிற வாடகைக்காரில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரை நானும் என் துணைவியாரும் சென்றோம். கேரளத்தைச் சேர்ந்த என் துணைவியார், கலை வரலாறு பயின்றவர். ஆனால் அவர் காஞ்சிபுரம் காண்பது முதல் முறை. கைலாசநாதர் ஆலயம், வைகுண்டப்பெருமாள் ஆலயம், உலகளந்த பெருமாள் ஆலயம், திருப்பருத்திக்குன்றம் சமண ஆலயம் ஆகியவற்றின் சிற்பங்களைக் கண்டோம். திரும்பிக்கொண்டிருந்தபோது. பேச்சு, கைலாசநாதர் ஆலயத்தின் ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் பற்றியே சென்றது. காஞ்சிபுரம் நகரைப் பிரிந்தவுடன்...
22 ஜனவரி 2010


X
Loading